விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் ஆதித்தமிழர் பேரவை சார்பில் இன்று (ஆகஸ்ட் 27) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில், கோவை மாவட்டம் சுல்தான்பேட்டை அருகில் கிருஷ்ணாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் சரிதாவை மாற்று சமூகத்தைச் சேர்ந்த பாலசுப்பிரமணியன் என்பவர் சாதி ரீதியாக பணி செய்ய விடாமல் தடுத்து வருவதாகவும் கடந்த 19ஆம் தேதி ஊராட்சி மன்ற அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைந்து ஊராட்சி மன்ற தலைவரை சாதியின் பெயரைச் சொல்லி இழிவுபடுத்தியது மட்டுமின்றி நாற்காலியில் அமர விடாமல் தடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.