தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சதுரகிரி கோயிலில் வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் பாதுகாப்பாக மீட்பு

சதுரகிரி கோயிலுக்கு சென்ற இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கிய நிலையில், அவர்களை வனத்துறையினர் பத்திரமாக மீட்டனர். இதனையடுத்து நீர்வரத்து குறைந்த பிறகு பக்தர்கள் கோயிலுக்குள் அனுமதிக்கபட்டனர்.

சதுரகிரி கோயிலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் பாதுகாப்பாக மீட்பு
சதுரகிரி கோயிலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் பாதுகாப்பாக மீட்பு

By

Published : Jul 30, 2022, 1:38 PM IST

விருதுநகர்:ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை பகுதியில் சுமார் தரை மட்டத்திலிருந்து 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.

இந்த கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை 4 நாட்கள், பௌர்ணமி 4 நாட்கள் என மொத்தம் 8 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.கோயிலில் வருடம்தோறும் ஆடி அமாவாசை திருவிழா வெகு விமர்சையாக கொண்டாடப்படும்.

சதுரகிரி கோயிலுக்கு சென்று வெள்ளத்தில் சிக்கிய பக்தர்கள் பாதுகாப்பாக மீட்பு

கடந்த இரண்டு ஆண்டுகளாக கரோனா தொற்று காரணமாக ஆடி அமாவாசை திருவிழாவிற்கு அனுமதி வழங்கப்படவில்லை. இந்த ஆண்டு ஆடி அமாவாசை திருவிழாவிற்கு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் கடந்த 25 ஆம் தேதி முதல் இன்று வரை 6 நாட்கள் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலுக்கு பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

இந்நிலையில் நேற்று ஆடி அமாவாசை திருவிழாவை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும்,வெளி மாநிலங்களிலிருந்தும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். இரவு நேரத்தில் சதுரகிரி மலை கோயிலில் பெய்த கனமழை காரணமாக கோயிலுக்கு செல்லும் மாங்கனி ஓடை, சங்கிலி பாறை உள்ளிட்ட ஓடைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.

இதனை அடுத்து கோயிலிலிருந்து அடிவாரத்தை நோக்கி கீழே இறங்கிய பக்தர்கள் வெள்ளத்தில் சிக்கிய நிலையில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு துறை உதவியுடன் கயிறு கட்டி பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இதை தொடர்ந்து இன்று(ஜூலை 30) பக்தர்கள் சதுரகிரி கோயிலுக்கு வருகை தந்த நிலையில் யாருக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. ஓடைகளில் நீர்வரத்து குறைந்ததை அடுத்து 4 மணிநேர கால தாமதத்திற்கு பின்பு பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டனர்.

இதையும் படிங்க:கிடுகிடுவென உயர்ந்த வைகை,மஞ்சளாறு அணைகளின் நீர்மட்டம்- கரையோர மக்களுக்கு எச்சரிக்கை

ABOUT THE AUTHOR

...view details