சாத்தூர் அருகிலுள்ள படந்தால் ஊராட்சி முத்துராமலிங்கபுரம் பகுதியைச் சேர்ந்தவர் பாலமுருகன். இவரது மகன் உமா மகேஸ்வரன் (எ) அஜித் (23). பிபிஏ பட்டதாரியான இவர், நண்பர்களுடன் அருகிலுள்ள முத்தால் நாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கும் தனியார் கிணற்றில் குளிக்கச் சென்றுள்ளார்.
குளிக்கும் போது, நீரில் மூழ்கி மூச்சுத்திணறி உயிரிழந்தார். உடனே உடன் சென்ற நண்பர்கள் உறவினர்களுக்கும், தீயணைப்புப் படை வீரர்களுக்கும் தகவல் அளித்தனர்.