விருதுநகர் அருகேயுள்ள சின்னபேராளியைச் சேர்ந்தவர் அழகு பட்டாணி (65). திருநங்கையான இவர், பெரியபேராளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட விரும்பியுள்ளார். அதன்படி, விருதுநகரிலுள்ள ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் இன்று வேட்புமனு தாக்கல் செய்தார். தற்போதுவரை பெரியபேராளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட மூன்று மனுக்கள் மட்டுமே வந்துள்ளன.
’தேர்தல் எப்போ வச்சாலும் நான் போட்டியிடுவேன்’ - வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை! - பெரியபேராளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை
விருதுநகர்: நடைபெறாமல் நின்றுபோன கடந்த உள்ளாட்சித் தேர்தலில் வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை ஒருவர், 2020 உள்ளாட்சித் தேர்தலில் ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்குப் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார்.
![’தேர்தல் எப்போ வச்சாலும் நான் போட்டியிடுவேன்’ - வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை! A Transgender filing nomination on tamilnadu local body election](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-5340928-thumbnail-3x2-ha.jpg)
A Transgender filing nomination on tamilnadu local body election
வேட்புமனு தாக்கல் செய்த திருநங்கை
மேலும், இந்தத் திருநங்கை வேட்பாளர் கடந்தமுறை உள்ளாட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டபோதும் பெரியபேராளி ஊராட்சி மன்றத் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: வாழ்க்கையில் சாதிக்க பாலினம் தடையில்லை: இந்தியாவின் முதல் திருநங்கை செவிலி!