விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள சேத்தூர், தேவதானம், சுந்தரராஜபுரம், கணபதிசுந்தரநாச்சியார்புரம் ஆகிய பகுதிகளில் கள்ளச்சாராயம் காய்ச்சி அதிக விலைக்கு விற்றுவருவதாக காவல் துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து, சேத்தூர் காவல் ஆய்வாளர் குமார், உதவி ஆய்வாளர் காளிராஜ் உள்ளிட்ட காவல் துறையினர் அனைத்து பகுதிகளிலும் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, தேவதானம் சாஸ்தா கோயில் அருகே உள்ள தென்னந்தோப்பில் கள்ளச்சாராயம் விற்றுவருவதாக தகவல் கிடைத்தது. இதையடுத்து சம்பவ இடத்திற்குச் சென்ற காவல் துறையினர் அங்கு அய்யர் என்பவர் சாரய ஊறல் போட்டிருப்பதைக் கண்டறிந்தனர்.
கள்ளச்சாராயம் விற்றவரை கைதுசெய்தக் காவல் துறையினர் மேலும், அவர் நாட்டு துப்பாக்கி வைத்திருப்பதையும் காவல் துறையினர் அறிந்தனர். இதையடுத்து அய்யரை கைது செய்த காவல் துறையினர், அவரிடமிருந்த நாட்டு துப்பாக்கியும், 100 லிட்டர் கள்ளச்சாராய ஊறலையும் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிங்க: புதுக்கோட்டையில் கள்ளச்சாராயம் காய்ச்ச முயன்ற ஒருவர் கைது