விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள ஓ.மேட்டுப்பட்டியைச் சேர்ந்த திருப்பதி என்பவரின் மகன் வெங்கடாசலபதி (48). கூலித் தொழிலாளியான இவருக்கும் அதே ஊரைச் சேர்ந்த அழகர்சாமி என்பவரின் மகன் முனியசாமிக்கும் முன்விரோதம் இருந்துள்ளது. இந்தச்சூழ்நிலையில் நேற்று(ஜூலை 11) குடிபோதையில் ஏற்பட்ட தகராறில் முனியசாமி வெங்கடாசலபதியை அரிவாளால் வெட்டியதில், வெங்கடாசலபதி ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
கொலை செய்த முனியசாமியை ஊர் பொதுமக்கள் மடக்கிப் பிடித்து, காவல் துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த சாத்தூர் வட்ட காவல் துறையினர் உயிரிழந்த வெங்கடாசலபதியின் உடலைக் கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.