தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

புற்கள் அகற்றும் இயந்திரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு! - turf removal machine

விருதுநகர்: சாத்தூர் அருகேயுள்ள தனியார் பட்டாசு ஆலையில் புற்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டபோது எதிர்பாராத விதமாக புற்கள் அகற்றும் இயந்திரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்தார்.

புற்கள் அகற்றும் இயந்திரத்தில் சிக்கி ஒருவர் உயிரிழப்பு  One person was killed when he got stuck in a turf removal machine  சாத்தூர் பட்டாசு ஆலையில் ஒருவர் உயிரிழப்பு  One man dead in Sattur firecracker factory  புற்கள் அகற்றும் இயந்திரம்  Grass removal machine  turf removal machine  A Man Dead In Sattur Crackers Factory
A Man Dead In Sattur Crackers Factory

By

Published : Feb 10, 2021, 4:30 PM IST

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகேயுள்ள இ.குமாரலிங்காபுரத்தில் சிவகாசியைச் சேர்ந்த சுப்புராஜ் என்பவரது பட்டாசு ஆலை இயங்கி வருகிறது. இந்த பட்டாசு ஆலை தீபாவளி பண்டிகை முடிந்து கடந்த நான்கு மாதங்களாக பணிகள் ஏதும் நடைபெறாமல் இருந்துள்ளது.

இதனால், பட்டாசு ஆலை முழுவதும் புற்கள் முளைத்து புதர்களாக இருந்ததால், பணியாளர்கள் புற்கள் அகற்றும் பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில், புற்கள் அகற்றும் இயந்திரத்தை பெத்துலுபட்டியைச் சேர்ந்த முருகையா (43) என்பவர் இயக்கிவந்தார்.

அப்போது, எதிர்பாராத விதமாக புற்கள் அகற்றும் இயந்திரத்தில் சிக்கிய முருகையா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வச்சக்காரப்பட்டி காவல் துறையினர் முருகையாவின் உடலைக் கைப்பற்றி உடற்கூராய்விற்காக விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். பின்னர் இது தொடர்பாக காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க:விருதுநகர் அருகே பட்டாசு ஆலையில் விபத்து: 5 பெண்கள் உயிரிழப்பு

ABOUT THE AUTHOR

...view details