விருதுநகர்:சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரை சேர்ந்தவர் செந்தில்குமார், இவர் ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார் இவரது மனைவி சரஸ்வதி அருகிலுள்ள தனியார் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகிறார். இவர்களுக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த முனியாண்டி என்பவருடன் கடந்த மூன்று வருடங்களுக்கு மேலாக சரஸ்வதிக்கு தொடர்பு இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் இருவரும் தனிமையில் அடிக்கடி சந்தித்து வந்ததாகவும் கூறப்படுகிறது. முனியாண்டிக்கு திருமணமாகி இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்தச் சூழலில் நேற்று வழக்கம்போல் பணிக்கு சென்றிருந்த செந்தில்குமார் மாலை நேரத்தில் தனது மனைவியின் தொலைபேசியில் தொடர்பு கொண்டு உள்ளார் தொடர்ந்து தொலைபேசி அழைப்பை சரஸ்வதி எடுக்காததால் சந்தேகமடைந்த அவர் அருகில் உள்ள உறவினர் வீட்டிற்கு தொடர்புகொண்டு தனது வீட்டில் சென்று பார்க்குமாறு கூறியுள்ளார்.