தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகாசி பத்ரகாளி அம்மன் கோயிலின் கோபுரத்தில் தீ விபத்து - நடந்தது என்ன? - தீ விபத்து

சிவகாசி பத்ரகாளி அம்மன் கோயிலில் ராஜகோபுரத்தின் மீது பட்டாசு வெடித்ததில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தை தீயணைப்புத் துறையினர் அணைத்தனர்.

Etv Bharat
Etv Bharat

By

Published : Nov 20, 2022, 9:47 PM IST

விருதுநகர்: சிவகாசியில் உள்ள பராசக்தி காலனியில் பிரசித்திபெற்ற பத்ரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் 50ஆண்டுகள் பழமை வாய்ந்தது. தற்போது கும்பாபிஷேகத்திற்காக இந்த கோயிலின் புனரமைப்புப் பணிகள் கடந்த ஆறு மாதங்களுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் இன்று (நவ.20) கோயில் வழியாக திருமண நிகழ்ச்சிக்காக சீர் வரிசைகள் கொண்டு செல்லும் பொழுது பட்டாசு வெடித்துள்ளனர். அப்போது, ஏற்பட்ட தீப்பொறி கோயிலின் ராஜகோபுரத்தின் மீது போர்த்தப்பட்டிருந்த பிளாஸ்டிக் தார்பாயில் விழுந்தது.

இதனையடுத்து அதில் தீப்பற்றி எரியத்தொடங்கியது. இது குறித்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சிவகாசி தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

கோயில் கோபுரத்தில் பற்றி எரிந்த தீ

இந்த தீ விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்த சிவகாசி நகர் காவல் துறையினர், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:இருசக்கர வாகனம் திருட்டு - சிசிடிவி உதவியுடன் போலீஸ் விசாரணை

ABOUT THE AUTHOR

...view details