தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஒரு வயது மகனுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்துகொண்ட தந்தை - விருதுநகர் மாவட்டம் சாத்தூர்

விருதுநகர்: ஒரு வயது மகனுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தையும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

ஒரு வயது மகனுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தந்தை
ஒரு வயது மகனுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தந்தை

By

Published : Apr 20, 2020, 4:34 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகிலுள்ள போத்திரெட்டிபட்டி கிராமத்தைச் சேர்ந்த மாரிக்கண்ணன் (29). இவர் தனியார் கார், வேன்களுக்கு ஓட்டுநராக பணி செய்துவந்தார். கடந்த 2018ஆம் ஆண்டு இவரது அத்தை மகள் சங்கரேஸ்வரியை திருமணம் செய்துகொண்டார். பின்னர் திருமணமாகி இரண்டு ஆண்டுகள் ஆன நிலையில் இவர்களுக்கு தற்போது மவுனி கணேஷ் என்ற ஆண் குழந்தை உள்ளான்.

ஒரு வயது மகனுக்கு விஷம் கொடுத்து தற்கொலை செய்து கொண்ட தந்தை

திருமணமான நாள் முதலே மாரிக்கண்ணனுக்கும், சங்கரேஸ்வரிக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுவந்துள்ளது. மேலும் தற்போது ஊரடங்கு உத்தரவின் காரணமாக வேலைக்குச் செல்லாமல் வீட்டிலேயே இருப்பதால் குடும்பத் தகராறு அதிகமானது.

இதன் காரணமாக இன்று தனது ஒரு வயது குழந்தை மவுனி கணேஷுக்கு விஷம் கொடுத்துவிட்டு தந்தையும் அதே விஷத்தை குடித்து தற்கொலை செய்துகொண்டார்.

பின்னர் இருவரும் விஷம் அருந்தியதை அறிந்த உறவினர்கள் உடனடியாக சாத்தூர் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இருவரும் உயிரிழந்தனர். இச்சம்பவம் குறித்து தகவலறிந்த இருக்கன்குடி காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: 'ஏழை, எளிய மக்களுக்கு நியாயவிலைக் கடை பொருள்கள் சென்றடைய வேண்டும்'

ABOUT THE AUTHOR

...view details