தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் கண்டபெருண்ட ஆசனம் செய்து 9 வயது மாணவி சாதனை! - விருதுநகர் பள்ளி மாணவி உலக சாதனை

விருதுநகர்: ஒன்பது வயது மாணவி ஒருவர், கண்ணாடி மீன் தொட்டிக்குள் 8 நிமிடம் 2 நொடிகள் கண்டபெருண்ட ஆசனத்தில் இருந்து உலக சாதனை படைத்துள்ளார்.

yoga
yoga

By

Published : Dec 7, 2019, 12:40 PM IST

விருதுநகர் அருகே உள்ள சூலக்கரையைச் சேர்ந்த கோவிந்தராஜ் - பார்வதி தம்பதியின் மகள் முஜிதா(9). இவர், விருதுநகர் செவல்பட்டியில் உள்ள தனியார் பள்ளியில் 4ஆம் வகுப்பு படித்து வருகிறார்.

கடந்த மூன்று ஆண்டுகளாக யோகாசன பயிற்சி பெற்று வரும் மாணவி முஜிதா, ஒரு அடி அகலமும் 17 இன்ச் நீளமும் கொண்ட சிறிய கண்ணாடி மீன் தொட்டிக்குள் அமர்ந்து, தனது இரு கால்களையும் முதுகு பக்கமாக வளைத்து அமர்ந்தவாறு 8 நிமிடம் 2 நொடிகள் கண்டபெருண்ட ஆசனத்தில் இருந்து உலக சாதனை படைத்துள்ளார்.

yoga

இந்த சாதனை நோபள் வேர்ல்டு ரெக்கார்டு புத்தகத்தில் பதிவு செய்யப்பட்டது. மேலும் இதற்கான சான்றிதழும் பதக்கமும் மாணவி முஜிதாவுக்கு வழங்கப்பட்டன. இதற்கு முன் சீனாவைச் சேர்ந்த யோகி என்பவர், மூன்று நிமிடங்கள் யோகாசனம் செய்த சாதனையை மாணவி முஜிதா முறியடித்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details