விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகேயுள்ள மேட்டுப்பட்டியைச் சேர்ந்தவர் சுப்பிரமணி இவரது மகன் மாரிக்கண்ணு (29). இவர் 2015ஆம் ஆண்டு தனது வீட்டின் முன் விளையாடிக் கொண்டிருந்த ஒன்பது வயது சிறுவனை ஆசைவார்த்தைக் கூறி வீட்டிற்கு அழைத்துச் சென்று பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
இதுதொடர்பாக, அச்சிறுவனின் பெற்றோர் சாத்தூர் காவல் துறையில் மாரிக்கண்ணு மீது புகார் அளித்தனர். காவல் துறையினர் இவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர்.
இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூரிலுள்ள விரைவு மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்றுவந்தது. இன்று இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பரிமளா, சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த இளைஞருக்கு மூன்று ஆண்டுகள் சிறை தண்டனையும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்தார்.