விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டையை சேர்ந்தவர் ராஜா. இவர் மரக்கடை பேருந்து நிறுத்தம் பின்புறம் 'ஸ்ரீநாச்சியார் மொபைல்ஸ்' என்ற செல்போன் விற்பனைக் கடையை நடத்தி வருகிறார். தற்போது ஊரடங்கு அமலில் உள்ளதால், கடையை பூட்டிவிட்டு வீட்டுலேயே இருந்து வந்துள்ளார்.
விருதுநகர் அருகே செல்போன் கடையில் 9 லட்சம் மதிப்பிலான செல்போன்கள் திருட்டு! - arupukottai news
விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே செல்போன் கடை ஒன்றில், பூட்டிய கடையில் ஒன்பது செல்போன்கள் திருடு போயிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், நேற்று முன்தினம் ராஜாவின் கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதாக அக்கம்பக்கத்தினர் பார்த்து, அவருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக கடைக்கு விரைந்த ராஜா, உள்ளே சென்று பார்த்த போது, தலா ஒரு லட்சம் ரூபாய் மதிப்பிலான ஒன்பது விலை உயர்ந்த செல்போன்கள் காணாமல் போனது தெரிய வந்துள்ளது. மேலும், கடையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவின் மெமரி கார்டையும் திருடர்கள் எடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து, நகர குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்ட காவல்துறையினர், வழக்குப்பதிவு செய்து திருட்டு குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.