தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

கிர்கிஸ்தானில் உணவின்றி தவிக்கும் மருத்துவ மாணவிகள்.. விரைந்து மீட்க கோரிக்கை - Medical students stranded in Kyrgyzstan

கிர்கிஸ்தான் நாட்டில் சிக்கித்தவிக்கும் தமிழ்நாடு மருத்துவ மாணவிகள் தங்களை தாயகத்திற்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கவேண்டுமென மத்திய மாநில அரசுக்கு உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

தமிழ்நாடு மருத்துவ மாணவிகள்
தமிழ்நாடு மருத்துவ மாணவிகள்

By

Published : Jul 9, 2020, 1:22 AM IST

கரோனா பாதிப்பின் காரணமாக இந்தியாவில் வெளிநாட்டு பயணிகளின் விமான சேவை நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

எனவே வெளிநாடுகளில் வசிக்கும் ஏராளமான இந்தியர்கள் சிறப்பு விமானங்கள் மூலம் தாயகம் திரும்பி வருகின்றனர்.

ஆனாலும் பலநாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் இன்னும் தாயகம் திரும்ப முடியாமல் அங்கு சிக்கித் தவித்து வருகின்றனர்.

இந்நிலையில் கிர்கிஸ்தான் நாட்டில் ஜல்லாபாத் ஸ்டேட் மெடிக்கல் யுனிவர்சிட்டியில் மருத்துவம் பயின்று வரும் விருதுநகர், மதுரை, தூத்துக்குடி, ராமநாதபுரம், தேனி மாவட்டங்களை சேர்ந்த 700-க்கும் மேற்பட்ட மருத்துவ மாணவிகள் தங்களை தாயகத்திற்க்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டுமென இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும், தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும் வீடியோ மூலம் உருக்கமான வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

மாணவிகளின் உருக்கமான வேண்டுகோள்

அதில், “ கிர்கிஸ்தான் நாட்டில் தமிழ்நாட்டை சேர்ந்த ஏராளமான மாணவ மாணவிகள் படித்துவருகின்றனர். தற்போது ஊரடங்கால் வெளியே செல்லமுடியாததால் பணம் எடுக்க முடியாமலும், உணவு வாங்க வழியின்றி தவித்து வருகிறோம்.

மேலும் மற்ற நாட்டைச் சேர்ந்த மாணவ மாணவியர்களை அந்தந்த நாடுகள் சிறப்பு விமானம் மூலம் அழைத்துச் சென்று விட்டது. ஆனால் இந்தியாவைச் சேர்ந்த நாங்கள் மட்டும் தான் இங்கே தவித்து வருகிறோம். எனவே உடனடியாக எங்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க:ஆன்லைன் வகுப்புகளை தடைசெய்யக்கோரி ஆர்ப்பாட்டம்!

ABOUT THE AUTHOR

...view details