விருதுநகர் மக்களவைத் தேர்தலில், திமுக கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிடும் மாணிக்கம் தாகூர், கூட்டணிக் கட்சி உறுப்பினர்களுடன் இன்று ஆலோசனைக் கூட்டம் நடத்தினார்.
திமுக மாவட்டச் செயலாளர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு ஆகியோர் தலைமை தாங்கினர். கூட்டணிக் கட்சியைச் சேர்ந்த பொறுப்பாளர்கள், ஒன்றிய நகர உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
அப்போது, பேசிய காங்கிரஸ் கட்சி வேட்பாளர் மாணிக்கம் தாகூர்,
"இந்தக் கூட்டணி வெற்றி பெற்ற பின்பு தேசிய வங்கி மற்றும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற கடன்கள் அனைத்தும் தள்ளுபடி செய்யப்படும்.
மேலும், குறைந்தபட்ச வருமான உத்தரவாத திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டு வறுமைக் கோட்டிற்குக் கீழ் உள்ள அனைவருக்கும் மாதம் 6 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.
பட்டாசு தொழில், தீப்பெட்டி தொழில் போன்ற சிறு தொழில்கள் ஜிஎஸ்டி வரியின் மூலம் மிகவும் பாதிக்கப்பட்டுள்ளன. எனவே அவற்றிற்கு ஜிஎஸ்டி வரியிலிருந்து விலக்கு அளிக்கப்படும், அல்லது குறைக்கப்படும்.
இப்போது இருக்கக்கூடிய 7 அடுக்கு ஜிஎஸ்டியை மாற்றி ஒரே அடுக்கு உடைய ஜிஎஸ்டியாக கொண்டுவரப்படும். தமிழகத்தில் 100 நாள் வேலைத் திட்டத்திற்கு 300 ரூபாய் சம்பளம் உயர்த்திக் கொடுக்கப்படும் " எனக் கூறினார்.
காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூர்