உலகை உலுக்கும் கரோனா வைரஸினால் நாடு முழுவதும் 21 நாட்கள் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அதனை பொதுமக்கள் கடைப்பிடிக்க காவல்துறையினர் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்துவருகின்றனர். அந்த உத்தரவை மீறி வெளியில் வருபவர்கள் மீது வழக்கு போடப்பட்டுவருகிறது.
அதன்படி, விருதுநகர் மாவட்டத்தில் 144 தடை உத்தரவை மீறிதாக 639 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
மேலும், இரண்டு கார்கள், இரண்டு ஆட்டோ, 114 இருசக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இந்தத் தகவல் மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க:ஊரடங்கு உத்தரவை மீறிய 8 பேர் கைது!