தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 50 சவரன் நகைகள் கொள்ளை

சிவகாசியில் அச்சக உரிமையாளரின் வீட்டின் பூட்டை உடைத்து, பீரோவில் வைக்கப்பட்டிருந்த 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை
சிவகாசியில் வீட்டின் பூட்டை உடைத்து 50 பவுன் நகை கொள்ளை

By

Published : Jul 15, 2021, 5:21 PM IST

விருதுநகர்: சிவகாசி கருப்பண்ணன் தெருவில் வசித்து வருபவர், பழனி குமார். இவர் பிரபல அச்சக நிறுவனத்தின் உரிமையாளர் ஆவார்.

இவர் கடந்த 11ஆம் தேதி குடும்பத்துடன் வெளியூர் புறப்பட்டுச் சென்றிருக்கிறார்

மீண்டும் வீடு திரும்பியபோது வீட்டின் கதவு உடைக்கப்பட்டு, பீரோவில் வைக்கப்பட்டிருந்த சுமார் 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார். இதுகுறித்து உடனடியாக சிவகாசி கிழக்கு காவல் துறையினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

சிசிடிவி கேமரா காட்சிகள் ஆய்வு

சம்பவ இடத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மனோகரன் தலைமையிலான காவலர்கள், தடயவியல் நிபுணர்கள் மோப்பநாய் உதவியுடன் சோதனை நடத்தினர். அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளும் ஆய்வு செய்யப்பட்டு வருகின்றன.

இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், விசாரணை நடத்தி வருகின்றனர். நகரின் முக்கியப் பகுதியில் நடைபெற்ற இந்த கொள்ளைச் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க:சொகுசுக் கார்களில் கஞ்சா கடத்தல்: துப்பாக்கி முனையில் மடக்கிப் பிடித்த போலீஸ்!

ABOUT THE AUTHOR

...view details