தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் அரை சதமடித்த கரோனா பாதிப்பு! - விருதுநகரில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை

விருதுநகர்: மாவட்டத்தில் மேலும் ஐந்து பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது.

corona
corona

By

Published : May 18, 2020, 12:31 PM IST

தமிழ்நாடு முழுவதும் கரோனா வைரஸ் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் சூழலில், மாவட்ட எல்லைகளைத் தீவிரமாகக் கண்காணிக்க சோதனைச் சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

சென்னை கோயம்பேடு சந்தையில் பரவிய கரோனா வைரஸ் பாதிப்பால், அங்கிருந்து பிற மாவட்டங்களுக்கு அதிக அளவில் மக்கள் சென்றதாலும், வேறு மாநிலங்களிலிருந்து அவரவர் சொந்த ஊர்களுக்கு மக்கள் திரும்புவதாலும் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

விருதுநகர் மாவட்டத்தில் இதுவரை 47 பேருக்கு கரோனோ பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், தற்போது மும்பை தாராவி பகுதியிலிருந்து அருப்புக்கோட்டைக்கு வந்துள்ள நான்கு பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51ஆக உயர்ந்துள்ளது. இதனால் அவர்கள் வசித்துவந்த பகுதி முழுவதும் சுகாதாரத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: கரோனா பாதிப்பு: இன்று மேலும் 639 பேருக்கு தொற்று உறுதி

ABOUT THE AUTHOR

...view details