விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே வாழ்வாங்கி கிராமத்தைச் சேர்ந்தவர் விவசாயி பெத்துராஜ். இவருக்கு தமயந்தி, சரஸ்வதி என்ற இரண்டு மகள்கள் உள்ளனர். இரண்டு மகள்களையும் பெத்துராஜ் வெளியூரில் திருமணம் முடித்துக் கொடுத்துள்ளார். பெத்துராஜுவுக்கு வாழ்வாங்கியில் அடுத்தடுத்து இரண்டு வீடுகள் உள்ளன. ஒரு வீட்டில் மட்டும் அனைவரும் ஒன்றாக தூங்குவது வழக்கம். அதேபோல் நேற்று பெத்துராஜ் தன் குடும்பத்தோடு ஒரு வீட்டில் உறங்கியுள்ளார். பெத்துராஜ் காலை எழுந்து வந்து பார்த்தபோது, அவருடைய இன்னொரு வீட்டின் கதவு உடைக்கப்பட்டிருந்தது.
வீட்டின் கதவை உடைத்து 42 சவரன் நகைகள் திருட்டு!
விருதுநகர்: பூட்டிய வீட்டின் கதவை உடைத்து 42 சவரன் நகையை திருடிச் சென்ற அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் வலைவீசி தேடி வருகின்றனர்.
இதனால் அதிர்ச்சியடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்த போது, பூஜை அறையில் இருந்த பீரோ திறந்து கிடந்தது. அலமாரி மற்றும் பீரோவில் இருந்த துணிகள் சிதறிக் கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த 42 சவரன் தங்க நகைகள் திருடுபோயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, பெத்துராஜ் பந்தல்குடி காவல்நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். தகவலின் பேரில் விரைந்து வந்த காவல்துறையினர் வீட்டுக்குள் வந்து பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மோப்ப நாய் மற்றும் கைரேகை நிபுணர்கள் உதவியுடன் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்த காவலர்கள் வழக்குப்பதிவு செய்து நகைகளை திருடிச் சென்ற, அடையாள தெரியாத நபர்களை வலைவீசித் தேடி வருகின்றனர்.