தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மீன்பிடி வலையில் சிக்கி 12 அடி நீளமுள்ள 4 மலைப் பாம்புகள் உயிரிழப்பு

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் தாமரைக்குளத்தில் மீன்பிடி வலையில் சிக்கி 12 அடி நீளமுள்ள 4 மலைப்பாம்புகள் பரிதாபமாக உயிரிழந்தது.

மீன்பிடி வலையில் சிக்கி 4 மலைப் பாம்புகள் உயிரிழப்பு
மீன்பிடி வலையில் சிக்கி 4 மலைப் பாம்புகள் உயிரிழப்பு

By

Published : Dec 3, 2019, 3:20 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே திருவண்ணாமலை பந்தப்பாறை பகுதியில் தாமரைக்குளம் உள்ளது. இந்த குளத்தை திருவண்ணாமலை பகுதியைச் சேர்ந்த அமலரூபம் என்ற பெண் தாமரை மலர்களை பறிப்பதற்காக கடந்த 2 ஆண்டுகளாக குத்தகை எடுத்துள்ளார்.

தினமும் காலையில் சென்று குளத்தில் உள்ள தாமரை மலர்களை பறித்து ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் பூக்கடைகளுக்கு விற்பனைக்காகவும், பல்வேறு நாட்டு மருந்து கடைகளுக்கு அனுப்பி வைப்பதும் இவரது வழக்கம். இந்நிலையில், வழக்கம்போல் தாமரை மலர்களை பறிக்க குளத்திற்குச் சென்றபோது குளத்தில் அடையாளம் தெரியாதவர்கள் மீன்களை பிடிப்பதற்காக வலைகளை போட்டுவைத்திருந்தனர்.

மீன்பிடி வலையில் சிக்கி 4 மலைப் பாம்புகள் உயிரிழப்பு

மலை அடிவாரம் என்பதாலும் ஆட்கள் அதிகம் நடமாட்டம் இல்லாத பகுதி என்பதாலும் இரவு நேரத்தில் குளத்திற்கு வந்த 12 அடியுள்ள 4 மலைப்பாம்புகள் அந்த மீன்பிடி வலையில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தது. ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறையினர் மீன் வலைகளை போட்டவர்கள் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க: குன்னூரில் 5 அடி நீள சாரைப் பாம்பு மீட்பு!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details