விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே குகன்பாறையை சேர்ந்தவர் புஷ்பராஜ்(61). இவருக்கு சொந்தமான கடையில் ஓட்டுக்கு பணம் கொடுப்பதற்காக பணம் வைத்துள்ளதாக ஏழாயிரம் பண்ணை காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது.
டெய்லர் கடையில் ரூ.4.30 லட்சம் பறிமுதல் - Taylor store
சாத்தூர் அருகே டெய்லர் கடையில் இருந்த 4.30 லட்சம் பணத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.
இதனையடுத்து அவரது கடையில், காவல்துறையினர் மற்றும் சாத்தூர் நகராட்சி டவுன் பிளானிங் இன்ஸ்பெக்டர் ரூபா தலைமையிலான தேர்தல் பறக்கும் படையினர் சோதனையில் ஈடுபட்டனர்.
அப்போது, உரிய ஆவணங்கள் இன்றி கடையில் வைக்கபட்டிருந்த ரூபாய் 4 லட்சத்து 30 ஆயிரம் பணத்தை பறிமுதல் செய்தனர். பின்னர் சாத்தூர் தொகுதி தேர்தல் உதவி அலுவலர் வெங்கடேஷிடம் கைப்பற்றப்பட்ட பணம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக, புஷ்பாராஜ் மீது வழக்கு பதிவு செய்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையுன் படிங்க: அண்ணா சிலைக்கு தீ வைப்பு: தலைவர்கள் கண்டனம்