தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கரோனாவை கட்டுப்படுத்த ஆகஸ்ட் 31ஆம் தேதி வரை ஊரடங்கை நீட்டித்து தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும், ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிறுக் கிழமைகளில் எந்த தளர்வுகளும் இல்லாமல் முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.
மதுக்கடையை உடைத்து 350க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கொள்ளை - டாஸ்மாக் கடை உடைத்து கொள்ளை
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மதுபான கடையை உடைத்து 350 க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டுள்ள பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மதுக்கடையை உடைத்து 350 க்கும் மேற்பட்ட மதுபாட்டில்கள் கொள்ளை
இந்நிலையில், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இலந்தைகுளம் பகுதியில் நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 2) முழு ஊரடங்கை பயன்படுத்திய அடையாளம் தெரியாத நபர்கள், டாஸ்மாக் கடையின் பூட்டை உடைத்து 60 ஆயிரம் மதிப்புள்ள 350க்கும் மேற்பட்ட மது பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றனர். தகவலறிந்து வந்த நத்தம்பட்டி காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து மதுபான பாட்டில்களை கொள்ளையடித்துச் சென்றவர்களை தேடி வருகின்றனர்.