தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

300 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவர் கைது! - ஒருவர் கைது

விருதுநகர்: சாத்தூரில் தடை செய்யப்பட்ட 300 கிலோ குட்கா பொருட்களை வைத்திருந்த குற்றத்திற்காக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

300 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவர் கைது!

By

Published : Jul 8, 2019, 8:59 PM IST

விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் நகர காவல்துறையினர் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் உள்ளதா என்பதற்காக கீழத்தெருவில் ஆய்வு மேற்கொண்ட பொழுது, அங்கு வசித்து வரும் ஆனந்த்(35) என்பவருக்கு சொந்தமான குடோனில் சோதனை நடத்தப்பட்டது.

அதில் சட்ட விரோதமாக குடோனில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட குட்கா சுமார் 300 கிலோ கண்டுபிடிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து குட்கா வைத்திருந்த குற்றித்திற்கு குடோன் உரிமையாளர் ஆனந்தை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

300 கிலோ குட்கா பறிமுதல்; ஒருவர் கைது!

ABOUT THE AUTHOR

...view details