தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

3 முயல்கள் பறிமுதல்: வேட்டையாடிய இருவர் கைது - முயல் வேட்டை

விருதுநகர்: முயல் வேட்டையாடிய 2 பேரை வத்திராயிருப்பு வனத் துறையினர் கைதுசெய்து, 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து மூன்று முயல்களைப் பறிமுதல்செய்துள்ளனர்.

3 முயல்கள் பறிமுதல்: வேட்டையாடிய இருவர் கைது
3 முயல்கள் பறிமுதல்: வேட்டையாடிய இருவர் கைது

By

Published : Apr 13, 2021, 11:59 AM IST

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே உள்ள பாலவநத்தம் பகுதியில் இரவு நேரங்களில் முயல் வேட்டை உள்பட பல்வேறு வனவிலங்குகள் வேட்டையாடப்படுகின்றன என மாவட்ட வனத் துறையினருக்குத் தகவல் கிடைத்தது.

தகவலின் அடிப்படையில் வேட்டையாடுபவர்களைப் பிடிக்க வத்திராயிருப்பு வனத் துறை அலுவலர் கோவிந்தன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு தனிப்படையினர் கடந்த சில நாள்களாக இரவு நேரங்களில் பாலவனத்தம் பகுதியில் இரவு நேரத்தில் கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டுவந்தனர்.

இந்நிலையில் இரவு நேரத்தில் நெற்றி லைட் உடன் இரண்டு பேர் வேட்டையாடிக் கொண்டிருந்தபோது அவர்களை வனத் துறையினர் சுற்றிவளைத்துப் பிடித்து கைதுசெய்து விசாரித்தனர்.

அப்போது அவர்கள் அருப்புக்கோட்டை பாலவனத்தம் பகுதியைச் சேர்ந்த சண்முகநாதன் (37), பாண்டியராஜ் (24) என்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து அவர்களை ஸ்ரீவில்லிபுத்தூர் வனத் துறை அலுவலகத்திற்கு அழைத்துவந்து விசாரித்தபோது அவர்களிடமிருந்த மூன்று முயல்களையும், முயல் பிடிக்க வைத்திருந்த ஆயுதங்களையும் வனத் துறையினர் பறிமுதல்செய்தனர்.

இதனைத் தொடர்ந்து மாவட்ட வன அலுவலர் ஆனந்த் உத்தரவின்பேரில் பிடிபட்ட இரண்டு பேருக்கும் தலா 25 ஆயிரம் வீதம் 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையும் படிங்க:இந்தியாவில் ஸ்புட்னிக்-வி கரோனா தடுப்பூசி பயன்பாட்டுக்கு அனுமதி



ABOUT THE AUTHOR

...view details