விருதுநகர்:சிவகாசி அருகேயுள்ள திருமேணி நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் அமல்ராஜ், முத்துக்குமார். இவர்கள் இருவரும் சிவகாசி பகுதியில் குடோன் ஒன்றை வாடகைக்கு எடுத்து அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருள்களைப் பதுக்கி வைத்திருப்பதாக காவல்துறையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது.
அதன் பேரில் அங்கு விரைந்து சென்ற சிவகாசி கிழக்கு காவல் நிலைய காவலர்கள் குடோனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த சுமார் ரூ. 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்து குடோன் உரிமையாளர் அமல்ராஜ் என்பவரை கைது செய்தனர்.