ETV Bharat Tamil Nadu

தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

அருப்புக்கோட்டை அருகே சாலை விபத்து: 3 பேர் உயிரிழப்பு - viruthunagar latest news

விருதுநகர்: அருப்புக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் ஒரு பெண் உட்பட 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்.

சாலை விபத்து
அருப்புக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு
author img

By

Published : Mar 29, 2021, 12:47 PM IST

சென்னை அம்பத்தூரை சேர்ந்த கோகுல், தனது குடும்பத்தினர் 8 பேருடன், காரில் திருச்செந்தூரிலுள்ள தனது குலசாமி கோயிலுக்கு சென்றுள்ளார். பின் தரிசனம் முடித்துவிட்டு மீண்டும் சென்னை நோக்கி மதுரை-தூத்துக்குடி பிரதான சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது அருப்புக்கோட்டை அருகே பந்தல்குடி புறவழிச்சாலையில் வந்து கொண்டிருக்கும் போது, நான்கு வழிச்சாலையில், நடைபயிற்சிக்கு சென்றுவிட்டு சாலையை கடக்க முயன்ற, கெங்கமநாயக்கன்பட்டியை சேர்ந்த சந்தோஷ் மற்றும் மதிவானன் ஆகிய சிறுவர்கள் மீது எதிர்பாராத விதமாக கார் மோதியது.

அருப்புக்கோட்டை அருகே நிகழ்ந்த சாலை விபத்தில் 3 பேர் உயிரிழப்பு

இதில் நிலைதடுமாறி, சாலை தடுப்பின் மீது மோதி, மறுபக்கம் சாலையில் பாய்ந்து விபத்து ஏற்பட்டது. இவ்விபத்தில் சாலையை கடக்க முயன்ற சந்தோஷ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும் காரில் பயணம் செய்த கோகுலின் உறவுப்பெண்ணான கனி மற்றும் கோகுலின் மகன் மாதேஷ் ஆகிய இரண்டு பேரும் காரிலிருந்து தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும் இரண்டு பேர் படுகாயமடைந்தனர்.

இது குறித்து தகவல் அறிந்த பந்தல்குடி காவல் துறையினர், சம்பவ இடத்திற்கு வந்து, காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது. இவ்விபத்து குறித்து பந்தல்குடி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து, விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதையும் படிங்க:அரசுப் பேருந்து தலைகீழாக கவிழ்ந்து விபத்து - 8 பேர் காயம்

ABOUT THE AUTHOR

...view details