தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து விபத்து - சிறுமி உட்பட 3 பேர் பலி! - 3 பேர்

விருதுநகர்: சாத்தூர் அருகே பெத்துரெட்டிபட்டி விலக்கில் சுற்றுலாப் பேருந்து கவிழ்ந்து சிறுமி உட்பட மூன்று பேர் உயிரிழந்தனர். ஏழு சிறுமிகள் உட்பட 46 பேர் பலத்த காயமடைந்தனர்.

சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்

By

Published : Jun 4, 2019, 11:30 AM IST

100 நாள் வேலை வாய்ப்பு திட்டத்தில் வேலைபார்க்கும் பாலக்காடு மாவட்டம், கரிப்போடு தாலுகா கொடுவாயூர் கிராமத்தைச் சேர்ந்த பெண்கள், அதே பகுதியைச் சோ்ந்த தேவயானி (45) தலைமையில் இரண்டு நாள் சுற்றுலா கிளம்பியுள்ளனர்.

அவர்கள் கோவா, கன்னியாகுமரி ஆகிய சுற்றுலாத் தளங்களுக்குச் சென்று சுற்றிப்பார்த்து விட்டு நேற்று சொந்த கிராமத்திற்குத் திரும்பிக் கொண்டிருந்தனர். சாத்தூர் அருகே பெத்துரெட்டிபட்டி விலக்கு நான்கு வழிச்சாலையில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து சாலையோரத்தில் உள்ள தடுப்புகளை உடைத்துக் கொண்டு பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இந்தப் பேருந்தை பாலக்காடு பகுதியைச் சோ்ந்த நிசாத் (23) என்பவர் ஓட்டி வந்துள்ளார். இதில் பேருந்தில் பயணம் செய்த சரோஜினி (65), பெட்டம்மாள் (75), நிகிலா (8) என்ற சிறுமி உள்பட மூன்று பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், இந்த விபத்தில் ஏழு குழந்தைகள் உட்பட 45 பேர் காயமடைந்தனர்.

சிறுமி உட்பட 3 பேர் உயிரிழப்
விபத்து நடந்த இடத்திற்கு சாத்தூர் தீயணைப்புத் துறையினர் விரைந்து வந்து மீட்புப் பணியில் ஈடுபட்டனர். மேலும், சாத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் தலைமையிலான காவல் துறையினரும் மீட்புப் பணியை மேற்கொண்டனர்.
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ராஜராஜன் சம்பவ இடத்தை பார்வையிட்டார்.இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்துவருகிறார்கள்.

ABOUT THE AUTHOR

...view details