தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகர்: ஒரேநாளில் 26 பேருக்கு கரோனா உறுதி - விருதுநகர் கரோனா எண்ணிக்கை

விருதுநகர்: கரோனா பாதிக்கப்பட்டு 20 பேர் ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாவட்டத்தில் ஒரேநாளில் மேலும் 26 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.

26 new corona cases in single day at virudunagar
விருதுநகர் கரோனா பாதிப்பு நிலவரம்

By

Published : Jun 24, 2020, 7:47 AM IST

விருதுநகர் மாவட்டத்தில் ராஜபாளையம் பகுதியில் நான்கு பேர், ஸ்ரீவில்லிபுத்தூர், சுற்று வட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த நான்கு பேர், சிவகாசியைச் சேர்ந்த ஐவர், வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த மூவர், திருச்சுழியில் ஒருவர், பிற பகுதிகளிலிருந்து மாவட்டத்துக்கு வந்தவர்கள் என மொத்தம் 26 பேருக்கு ஒரேநாளில் கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதையடுத்து மாவட்டத்தில் கரோனா பாதிப்பு மொத்தம் 234 ஆக உயர்ந்துள்ளது.

ராஜபாளையத்திலுள்ள அரசு மருத்துவமனையில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள விபத்து மற்றும் அவசர கால சிகிச்சைப் பிரிவு கட்டடம் கரோனா தனிப்பிரிவாக மாற்றப்பட்டது.

அங்கு 20 படுக்கைகள் தயார்செய்யப்பட்ட நிலையில், கரோனா பாதிப்புக்குள்ளான 20 நோயாளிகள் விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து தற்போதுவரை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்துவருவதால், ராஜபாளையம் அரசு மருத்துவமனை முழுவதும் கரோனா தொற்றுக்கு மட்டும் பயன்படுத்த முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. அதற்கான ஏற்பாடுகளை அலுவலர்கள் செய்துவருவதாகவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஒரு லட்சம் மதிப்பிலான கருந்திரியை பறிமுதல்செய்த காவல் துறை

ABOUT THE AUTHOR

...view details