தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

விருதுநகரில் இளம் பெண் பாலியல் வன்கொடுமை வழக்கு - சிபிசிஐடி விசாரணை தொடங்கியது

தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய விருதுநகர் 22 வயது இளம் பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி முதல் கட்ட விசாரணையை தொடங்கினார்.

சிபிசிஐடி விசாரணை
சிபிசிஐடி விசாரணை

By

Published : Mar 26, 2022, 10:32 AM IST

விருதுநகரில் 22 வயது இளம்பெண் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் ஹரிஹரன், ஜூனத் அகமது, மாடசாமி, பிரவீன் மற்றும் பள்ளி மாணவர்கள் 4 பேரும் என 8 பேர் இந்த வழக்கில் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் நேற்று மாலை இந்த வழக்கு விசாரணை சம்பந்தமான ஆவணங்களை விருதுநகர் டி.எஸ்.பி அர்ச்சனா, சிபிசிஐடி விசாரணை அலுவலர் வினோதினியிடம் ஒப்படைக்கப்படைத்தார்.

முன்னதாக கைது செய்யப்பட்ட 8 பேர் மீது சிபிசிஐடி காவல்துறையினர் 6 பிரிவுகளின் கீழ் புதிதாக வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த நிலையில் இன்று(மார்ச் 26) காலை விருதுநகர் சிபிசிஐடி அலுவலகத்தில் டிஎஸ்பிக்கள் சரவணன் மற்றும் சிறப்பு புலனாய்வு பிரிவு அலுவலரான வினோதினி ஆகியோரிடம் சிபிசிஐடி எஸ்பி முத்தரசி ஆலோசனை நடத்தினார்.

சிபிசிஐடி விசாரணை:முதல் கட்டமாக பாலியல் வழக்கில் பாதிக்கப்பட்ட இளம் பெண்ணிடம் சிபிசிஐடி எஸ்.பி முத்தரசி மற்றும் இந்த வழக்கில் விசாரணை அலுவலரான வினோதினி ஆகிய இருவரும் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

அதைத் தொடர்ந்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஹரிஹரன் உள்ளிட்ட 4 பேரையும், ராமநாதபுரத்தில் உள்ள கூர்நோக்கு இல்லத்தில் அடைக்கப்பட்டுள்ள சிறுவர்கள் 4 பேரையும் 5 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க சிபிசிஐடி காவல்துறையினர் திட்டமிட்டு உள்ளனர்.

இதையும் படிங்க: விருதுநகர் பாலியல் வழக்கு: 'விரைந்து தண்டனை பெற்றுத் தருவோம்' - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

ABOUT THE AUTHOR

...view details