விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் பட்டாசு ஆலையில் கடந்த பிப்.12 ஆம் தேதி, ஏற்பட்ட வெடி விபத்தில் 21 பேர் உயிரிழந்தனர். இந்நிலையில் இன்று (பிப்.24) , மேலும் ஒருவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
சாத்தூர் பட்டாசு ஆலை விபத்து: உயிரிழப்பு 22 ஆக உயர்வு! - sathur crackers shop burst
விருதுநகர்: சாத்தூரில் பட்டாசு ஆலை வெடித்து சிதறியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 22 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர்
சாத்தூர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடுச்சூரங்குடியைச் சேர்ந்த பால்ராஜ் என்பவர் மனைவி ஜெயா (50) இறந்துள்ளார். மேலும், பலர் அரசு, தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:ஆள்மாறாட்டம் செய்து ஒன்றரை கோடி மதிப்பிலான நிலத்தை அபகரித்த இருவர் கைது!