தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ரயிலில் தவற விட்ட 18 சவரன் நகைகள் உரியவரிடம் ஒப்படைப்பு! - ஸ்ரீவில்லிப்புத்தூர்

விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூரில் ரயிலில் தவறவிட்ட 18 சவரன் நகையை மீட்டு, உரியவர்களிடம் ரயில்வே அலுவலர்கள் ஒப்படைத்தனர்.

ரயிலில் தவற விட்ட 18பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு
ரயிலில் தவற விட்ட 18பவுன் நகை உரியவரிடம் ஒப்படைப்பு

By

Published : Apr 24, 2021, 8:19 PM IST

சென்னையில் இருந்து செங்கோட்டை வரை செல்லும் ரயிலில், சென்னையிலிருந்து சிவகாசி வரை பயணம் செய்த ஜீவானந்தம் குடும்பத்தின் 5 பேர், சிவகாசி ரயில் நிலையத்தில் இறங்கும் போது, தாங்கள் கொண்டு வந்த 'டிராவல் பேக்' ஒன்றை இருக்கையில் வைத்துவிட்டு கீழே இறங்கினர்.

ரயில் புறப்பட்ட நிலையில் உடனே சிவகாசி ரயில் நிலைய அலுவலர்களிடம் தகவல் தெரிவித்தனர். அவர்கள் ஸ்ரீவில்லிபுத்தூர் ரயில் நிலையத்திற்குத் தகவல் தெரிவித்ததன் பேரில் பணியிலிருந்த ரயில்வே ஊழியர் ஜெயலட்சுமி மற்றும் இருப்புப் பாதை சார்பு ஆய்வாளர் விஜயன், பெண் தலைமைக் காவலர் மல்லிகா, முதல்நிலைக் காவலர் ரவி ஆகியோர் விரைந்து சென்று அவர்கள் பயணித்த பெட்டியைப் பார்வையிட்டனர்.

அங்கு தவறவிடப்பட்டிருந்த பேக்கை மீட்டு, உரியவர்களுக்குத் தகவல் தெரிவித்து, ஸ்ரீவில்லிபுத்தூர் இருப்புப் பாதை காவல் நிலையத்திற்கு வரவழைத்தனர். பொருளுக்கான உரிமையாளர் வந்ததும் பேக்கில் இருந்த மொத்தம் 18 சவரன் தங்க நகைகளை சரி பார்த்து சார்பு ஆய்வாளர் விஜயன் முன்னிலையில் ஒப்படைக்கப்பட்டது.

தவறவிட்ட நகையை பெற்றுக் கொண்ட குடும்பத்தினர், ரயில்வே ஊழியர்கள் மற்றும் அலுவலர்களுக்கு நன்றி தெரிவித்தனர்.

இதையும் படிங்க:உயிரைப் பணையம் வைத்து குழந்தையைக் காப்பாற்றிய ரயில்வே ஊழியரை கவுரவித்த ஜாவா!

ABOUT THE AUTHOR

...view details