விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள கலங்கபேரி பகுதியில் வரதராஜ், ராமசாமி ஆகியோர் இணைந்து நிதி நிறுவனம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், நேற்று முன்தினம் (ஆகஸ்ட் 18) வழக்கம் போல் ஊழியர்களும் மேலாளரும் அலுவலகத்தை பூட்டிவிட்டு வசூலுக்கு சென்றுவிட்டு மாலை திரும்பி வந்தனர். அப்போது, அலுவலகத்தின் பின்பக்க கதவு உடைக்கப்பட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். உள்ளே சென்று பார்த்த போது, பீரோ மற்றும் இரும்பு லாக்கர் உடைக்கப்பட்டு அதிலிருந்த 15 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.
தனியார் நிதி நிறுவனத்தில் ரூ. 15 லட்சம் கொள்ளை! - தனியார் நிதி நிறுவனத்தில் ரூபாய் 15 லட்சம் பணம் கொள்ளை
விருதுநகர்: ராஜபாளையத்தில் தனியார் நிதி நிறுவனத்தில் பீரோ மற்றும் இரும்பு லாக்கரில் வைக்கப்பட்டிருந்த 15 லட்சத்து 35 ஆயிரம் ரூபாய் கொள்ளையடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கொள்ளை
இது குறித்து உடனடியாக காவல் துறைக்கு தகவல் அளிக்கப்பட்டது. தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த ராஜபாளையம் காவல்துறை துணை கண்காணிப்பாளர் நாகசங்கர் தலைமையிலான குழுவினர், விசாரணை மேற்கொண்டனர். மேலும், கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்ப நாய் உதவியுடன் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், நிதி நிறுவனத்தில் பணிபுரியும் ஆறு ஊழியர்களிடம் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.