விருதுநகரில் நாளிதழ் செய்தியாளர், பெண் மருத்துவர் உள்பட 15 பேருக்கு கரோனா வைரஸ் (தீநுண்மி) பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து இவர்கள் விருதுநகர், மதுரையில் உள்ள அரசு மற்றும் தனியார் மருத்துவமனையில் கரோனா சிறப்புப் பிரிவில் சிகிச்சைப் பெற்றுவருகின்றனர்.
ஒரே நாளில் மருத்துவர், செய்தியாளர் உள்பட 15 பேருக்கு கரோனா - விருதுநகரில் கரோனா நிலவரம்
விருதுநகர்: விருதுநகரில் ஒரேநாளில் 15 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.
விருதுநகரில் ஒரே நாளில் 15 பேருக்கு கரோனா
இதைத்தொடர்ந்து கரோனா பாதிப்பு இருந்த நபர்கள் வசித்துவந்த பகுதிகள் முழுவதும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டது. அத்துடன் நோய்த்தொற்று உள்ளவர்களிடம் நெருக்கமாக இருந்தவர்களைக் கண்டறியும் பணிகள் நடைபெறுவதுடன், அவர்கள் அனைவருக்கும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் கரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுவருகிறது.