தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

144 தடையை மீறி விற்கப்பட்ட 47 மதுபாட்டில்கள் பறிமுதல் - 47 liquor shops seized in Virudhunagar

விருதுநகர்: ஊரடங்கு உத்தரவை மீறி சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட 47 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்
பறிமுதல் செய்யப்பட்ட மது பாட்டில்கள்

By

Published : Mar 28, 2020, 1:19 PM IST

உலகை அச்சுறுத்திக்கொண்டிருக்கும் கரோனா வைரஸால் ஏராளமானோர் உயிரிழந்துவருகின்றனர். இதனால், இந்தியாவிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து, தமிழ்நாட்டு முதலமைச்சர் உத்தரவுப்படி டாஸ்மாக் கடைகள், தனியார் மதுபான பார்கள் மூடப்பட்டன.

இந்நிலையில் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் பொன்னாங்கன்னி கண்மாய் பகுதியில் சட்டவிரோதமாக மது பாட்டில்கள் விற்கப்படுவதாக வருவாய் துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அத்தகவலின் பேரில் வட்டாட்சியர் கிருஷ்ணவேணி தலைமையில், வருவாய் துறையினர் அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டபோது, அப்பகுதியில் மது விற்பனை செய்தது தெரியவந்தது.

ஊரடங்கு உத்தரவை மீறி விற்பனை செய்யப்பட்ட மது பாட்டில்கள் பறிமுதல்

அப்போது, அலுவலர்களை பார்த்ததும் கள்ளத்தனமாக மது விற்பனை செய்த நான்கு பேர் தப்பி ஓடினர். அதன் பின்னர் அங்கிருந்த 47 மது பாட்டில்களை வருவாய் துறையினர் பறிமுதல் செய்து மதுவிலக்கு காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.


இதையும் படிங்க:
உணவு பொருட்களை ஏற்றி செல்ல டோக்கன் - ஊரடங்கை மீறி ஒரே இடத்தில் குவிந்த லாரி ஓட்டுநர்கள்
!

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details