சென்னையிலிருந்து வந்த சிறுவன், அவரது குடும்பத்தாருக்கு அவர் கிராமத்திற்கு அருகேயுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதில், 13 வயது சிறுவனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து சுகாதாரத் துறையினர், வருவாய்த் துறையினர், காவல் துறையினர் மருத்துவ அலுவலர்கள் சிறுவனின் கிராமத்திற்குச் சென்று கிராமத்தை தனிமைப்படுத்தியுள்ளனர்.
அதன்பின்னர் ஆம்புலன்ஸ் மூலம் அழைத்துச் செல்லப்பட்ட சிறுவன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அந்த பகுதி முழுவதும் காவல் துறை, சுகாதாரத் துறையினரின் கட்டுபாட்டுக்குள் வந்துள்ளது. மேலும், இந்தப் பகுதியிலுள்ள அனைவருக்கும் கரோனா வைரஸ் குறித்த ரத்தப் பரிசோதனை செய்யப்படும் என சுகாதாரத் துறையினர் தெரிவித்துள்ளனர்.