விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே இந்திரா நகர் பகுதியில் ஜெயமுருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் விருதுநகர் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தனிப்பிரிவு காவலராக பணிபுரிந்து வருகிறார். இவர் பணிக்குச் சென்றுவிட, வீட்டில் யாரும் இல்லாததை நோட்டமிட்ட கொள்ளையர்கள், வீட்டின் கதவை உடைத்து 13 பவுன் தங்க நகையை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர்.
காவலர் வீட்டிலேயே கைவரிசை; கொள்ளையர்களுக்கு வலைவீச்சு - 13 sovereign gold jewelry robbery at police house
விருதுநகர்: ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே காவலர் வீட்டில் 13 பவுன் தங்க நகை கொள்ளைபோனது குறித்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

13 sovereign gold jewelry robbery at police house
மேலும், அதே பகுதியில் வசிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் குழந்தையம்மாள் வீட்டிலும் யாரும் இல்லாத நேரத்தில் கொள்ளையடிக்கும் முயற்சி நடந்துள்ளது. ஆசிரியர் 70 பவுன் தங்கநகையை அலமாரியில் வைக்காமல், வீட்டின் மேல் அடுக்கில் உள்ள அறையில் நகையை தனித் தனியாக பிரித்து வைத்ததால் கொள்ளையர்களிடம் இருந்து நகைகள் தப்பியது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து நகர காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கண்காணிப்புப் படக்கருவியின் பதிவுகளைக் கொண்டு குற்றவாளியை தேடி வருகின்றனர்.
காவலர் வீட்டிலேயே கைவரிசை காட்டிய கொள்ளையர்கள்
TAGGED:
Srivilliputhur gold theft