விருதுநகர்: சிவகாசி அருகே தம்பதியினர் பட்டாசு ஆலையில் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களுக்கு இரண்டு மகள்கள் உள்ளனர். இதில் மூத்த மகள் திருமணம் முடிந்து அதே பகுதியில் வசித்து வருகிறார். இரண்டாவது மகள் அதே மாவட்டத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 11ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
இந்நிலையில், இன்று மாலை பள்ளி முடிந்து வீட்டிற்கு மாணவி வந்துள்ளார். பின்னர் மாணவியின் பாட்டி வெளியே சென்று வீடு திரும்பியுள்ளார். இந்த குறிப்பிட்ட கால இடைவெளியில் மாணவி தூக்கிட்டுத்தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதனைக்கண்டு அதிர்ச்சி அடைந்த மாணவியின் பாட்டி கூச்சலிட்டதில், உடனடியாக அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து தூக்கில் தொங்கிக்கொண்டிருந்தவரை கீழே இறக்கிப்பார்த்துள்ளனர்.