விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே கூரைகுண்டு மேற்குத் தெருவை சேர்ந்தவர்கள் வேலுச்சாமி மற்றும் மாரியம்மாள் தம்பதியினர். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இதில் முதல் மகளுக்கு திருமணமான நிலையில், இரண்டாம் மகள் முத்துலெட்சுமி (15) இவர்களுடன் வசித்து வருகிறார். வேலுசாமி கூலி வேலை செய்து வருகிறார். இவரது மனைவி 100 நாள் வேலைத்திட்டத்தில் வேலை செய்து வருகிறார். இரண்டாம் மகள் முத்துலெட்சுமி அதே பகுதியிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார்.
தற்போது ஊரடங்கால் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் அவர் வீட்டில் இருந்துள்ளார். இந்நிலையில் இன்று இவரது பெற்றோர், தற்போது பொதுத்தேர்வு நடைபெறவுள்ளதால் வீட்டிலிருந்து படிக்குமாறு கூறிவிட்டு வேலைக்கு சென்றுள்ளார்கள். அவர்கள் சென்ற சிறிது நேரத்தில் மாணவி வீட்டில் இருந்த மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார்.