தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

மாணவியை 6 மாத கர்ப்பமாக்கிய மாணவன்... போக்சோவில் கைது! - virudhunagar crime

விருதுநகர்: 10ஆம் வகுப்பு படிக்கும் மாணவியை 6 மாத கர்பிணியாக்கிய அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

abuse

By

Published : Sep 11, 2019, 12:21 PM IST

அருப்புக்கோட்டை அருகே சித்தலகுண்டு கிராமத்தைச் சேர்ந்த மாணவி, அதே கிராமத்திலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த 11ஆம் வகுப்பு மாணவன் ஒருவர், அருகிலுள்ள தமிழ் பாடி கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறார்.

ஒரே கிராமத்தைச் சேர்ந்த இருவருக்கும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இருவரும் பெற்றோருக்குத் தெரியாமல் தனிமையில் அடிக்கடி சந்தித்து நெருக்கமாக இருந்து வந்துள்ளனர். இந்நிலையில் மாணவிக்கு அவ்வப்போது வயிற்றுவலி ஏற்பட்டுள்ளது. வலி கடுமையாக இருந்ததால், அவரின் பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் மாணவி 6 மாத கர்ப்பிணியாக இருப்பதாகப் பெற்றோரிடம் தெரிவித்தனர். அதிர்ச்சி அடைந்த மாணவியின் பெற்றோர், அவரிடம் விசாரித்ததில், பதில் கூற மறுத்துள்ளார். இதனால் பெற்றோர் திருச்சுழி காவல் நிலையத்தில் புகாரளித்தனர். மாணவி 18 வயதிற்குக் கீழ் இருந்த காரணத்தினால் புகாரை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அனுப்பி வைத்தனர்.

புகாரைப் பெற்றுக்கொண்ட அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் தென்றல், மாணவியிடம் நடத்திய விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த பள்ளி மாணவர் ஒருவருடன் தனக்குப் பழக்கம் இருந்ததாகக் கூறியுள்ளார். மாணவரைப் பிடித்து காவல்துறையினர் விசாரணை செய்ததில் மாணவியைக் கர்ப்பமாக்கியதை ஒப்புக்கொண்டார்.

இதனைத் தொடர்ந்து மாணவன் அடைக்கலத்தை அருப்புக்கோட்டை அனைத்து மகளிர் காவல்துறையினர் போக்சோ சட்டத்தில் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தினர். அதனையடுத்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்தனர்.

ABOUT THE AUTHOR

...view details