தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஒரேநாளில் 10 ஆயிரம் பேர் சாமி தரிசனம்! - சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் தரிசனம்

விருதுநகர்: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயிலில் ஒரேநாளில் 10 ஆயிரத்து 800 பேர் சாமி தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

sathuragi
sathuragi

By

Published : Sep 19, 2020, 2:31 PM IST

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் தரைமட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ளது பிரசித்திப் பெற்ற சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில்.

இந்தக் கோயிலுக்கு மாதந்தோறும் அமாவாசை, பெளர்ணமி நாள்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத் துறை அனுமதி அளித்துள்ளது.

இந்நிலையில் மகாளய அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோயிலுக்கு நான்கு நாள்கள் பக்தர்கள் சென்று தரிசிக்க கோயில் நிர்வாகம் சார்பில் அனுமதி வழங்கப்பட்டது.

அதன்படி மகாளய அமாவாசையை முன்னிட்டு ஒரேநாளில் 10 ஆயிரத்து 800 பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளதாக கோயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

ABOUT THE AUTHOR

...view details