விருதுநகர் மாவட்டம், சாத்தூர் இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் 100 விழுக்காடு வாக்குப்பதிவை வலியுறுத்திய விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆட்சியர் ரா.கண்ணன் தலைமையில் நடைபெற்றது.
அதனையொட்டி, வங்கி அலுவலகம், ஏடிஎம் மையங்களில் விழிப்புணர்வு நோட்டிஸ்கள் ஒட்டப்பட்டன. வங்கி வாடிக்கையாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு விழிப்புணர்வு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டது. இறுதியில் நூறு விழுக்காடு வாக்குப்பதிவின் அவசியம் குறித்து வங்கி ஊழியர்களும் பிற அலுவலர்களும் மாவட்ட ஆட்சியர் தலைமையில் உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.