விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அண்ணா நகரைச் சேர்ந்தவர் சத்தியமூர்த்தி. இவர் தனியார் குச்சி கம்பெனியில் வேலை பார்த்துவருகிறார். இவரது ஒரே மகன் ஹரிஷ் (11). இவர் ஐந்தாம் வகுப்பு படித்துவந்தார்.
தற்பொழுது கரோனா விடுமுறை காலம் என்பதால் வீட்டிலேயே இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிஷுக்கு கடந்த 4 நாள்களாக காய்ச்சல் இருந்துள்ளது.
இதனால் ஹரிஷை அழைத்துக்கொண்டு பெற்றோர் பட்டம்புதூரில் உள்ள நாட்டு வைத்தியச் சாலைக்குச் சென்றனர். அங்கு வைத்தியம் பார்த்துவிட்டு திரும்பி வீடு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்திற்கு வந்துள்ளனர்.