தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

சிறுவர்களை போதை பொருட்களை உபயோகிக்க வற்புறுத்திய இளைஞர்கள்.. - கஞ்சா விற்பனை

விழுப்புரம் அருகே சிறுவர்களை போதை பொருட்களை உபயோகிக்க வற்புறுத்திய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க கிராம மக்கள் வலியுறுத்தியுள்ளனர்.

சிறுவர்களை போதை பொருட்களை உபயோகிக்க வற்புறுத்திய இளைஞர்கள்
சிறுவர்களை போதை பொருட்களை உபயோகிக்க வற்புறுத்திய இளைஞர்கள்

By

Published : Nov 7, 2022, 9:44 AM IST

விழுப்புரம்: கண்டாச்சிபுரம் வட்டம், பரனூர் கிராமத்தில் உள்ள ஏரிக்கரையில் சமீக காலமாக சட்ட விரோதமான முறையில் இரவு 10 மணிக்கு மேல் அரசு மதுபான விற்பனை, கள்ள சாராய விற்பனை, கஞ்சா விற்பனையும் கடந்த இரு மாதங்களாக நடந்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டி வருகின்றனர்.’

இந்நிலையில் உச்ச கட்டமாக இளம் சிறார்களை வற்புறுத்தி போதைப்பொருட்களை பயன்படுத்த சில சமூக விரோதிகள் வற்புறுத்திய சம்பவம் உள்ளூர் கிராம வாசிகளிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் போதை பொருட்கள் தொடர்பாக பல முறை காவல்துறையிடம் கூறியும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது கிராம மக்களின் கவலையாக உள்ளது.

சிறுவர்களை போதை பொருட்களை உபயோகிக்க வற்புறுத்திய இளைஞர்கள்

மேலும் பக்கத்து கிராமமான கீழக்கொண்டூரை சேர்ந்த இளைஞர்கள், பரனூர் பகுதியில் கஞ்சா போதைப் பொருளை உபயோகித்து விட்டு, பெண்களிடம் தவறாக நடக்க முயன்ற சம்பவம் அரங்கேறியுள்ளதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இளம் சிறார்களை வற்புறுத்தி போதை பொருட்களை உபயோகப்படுத்த வற்புறுத்திய சமூக விரோதிகள் மீது மாவட்ட நிர்வாகமும், தமிழக அரசும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க:ஆன்லைனில் போதைப் பொருள்கள் கலந்த சாக்லேட் விற்பனை..! ஒருவர் கைது...

ABOUT THE AUTHOR

...view details