தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்படும் இளைஞர்கள் - அதிர்ச்சி காணொலி - அதிர்ச்சி காணொலி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திதுண்டு பகுதியில் மூன்று இளைஞர்கள் ஆற்றில் குளித்து கொண்டிருக்கும்போது வெள்ளநீர் அவர்களை இழுத்துச் சென்றது. இது தொடர்பான காணொலி தற்போது வெளியாகியுள்ளது.

Youths swept away by river floods
Youths swept away by river floods

By

Published : Nov 20, 2020, 12:59 PM IST

விருதுநகர்: ஆற்றில் அடித்துச் செல்லப்பட்ட இளைஞர்கள் தொடர்பான காணொலி தற்போது வெளியாகியுள்ளது.

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அத்திதுண்டு பேமலையான் கோயில் அருகேயுள்ள ஓடையில் கோட்டைப்பட்டி பகுதியைச் சேர்ந்த பால்பாண்டி, முத்துக்கருப்பன், கோபி ஆகிய மூன்று இளைஞர்கள் குளித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது எதிர்பாராதவிதமாக மூவரையும் வெள்ள நீர் அடித்துச் சென்றது. தொடர்ந்து சம்பவம் குறித்து தீயணைப்புத் துறையினருக்கு தகவலளிக்கப்பட்டது. களத்தில் இறங்கி தேடுதல் பணியை தொடங்கிய தீயணைப்பு வீரர்களுக்கு, வெள்ளத்தின் பாய்ச்சல் அதிகம் இருந்ததால், மாயமானவர்களை தேடுவதில் தொய்வு ஏற்பட்டது.

ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும் இளைஞர்கள் - அதிர்ச்சி காணொலி

இச்சூழலில், பால்பாண்டி, முத்துக்கருப்பன் ஆகிய இருவரின் உடல் இன்று மீட்கப்பட்டது. கோபி என்ற இளைஞரின் உடலை தேடி வருகின்றனர். இவ்வேளையில் இளைஞர்கள் ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லும் காணொலி வெளியாகி தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ABOUT THE AUTHOR

...view details