விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே எரவளம் கிராமத்தைச் சேர்ந்த எழுமலையின் மகன் கவியரசன்(20). இவர் எரவலத்தில் உள்ள பொதுப்பணித் துறைக்கு சொந்தமான ஏரியில் மணல் அல்லுவதையும், அவர்களிடம் அந்த கிராமத்தைச் சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோர் பணம் பெறுவதையும் வீடியோ எடுத்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த மணல் ஏற்றி வந்த சிலர் கவியரசனை அடித்து அவர் வைத்திருந்த செல்போனை பறித்துச் சென்றனர். இதனால் மனமுடைந்த கவியரசன், வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை! - vilupuram
விழுப்புரம்: திருக்கோவிலூர் அருகே கிராம நிர்வாக அலுவலர் லஞ்சம் வாங்கியதை வீடியோ எடுத்த இளைஞர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கவியரசன்
இதுபற்றி தகவலறிந்து சம்பவ இடம் வந்த காவல்துறையினர், கவியரசன் உடலை கைப்பற்றி உடற்கூறாய்வுக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால், அனுமதியில்லாமல் உடலை கைப்பற்றியதால் ஆத்திரமடைந்த உறவினர்கள், நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர் ஆகியோரிடம் பணத்தை பெற்றுக் கொண்டு காவல்துறையினர் செயல்படுவதாகக்கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர், காவல்துறையினர் மேற்கொண்ட நீண்ட பேச்சுவார்த்தையை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.