விழுப்புரம் : விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொள்வதற்காக மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மனுகொடுக்க மக்கள் வந்திருந்தனர்.
ஆட்சியர் அலுவலகத்தில் விஷமருந்தி இளைஞர் தற்கொலை முயற்சி! - விழுப்புரம் மாவட்ட செய்திகள்
விழுப்புரம் ஆட்சியர் அலுவலகத்தில் இளைஞர் ஒருவர் விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
இந்தநிலையில், சொர்ணாவூர் கீழ்பாதி கிராமத்தைச் சேர்ந்த தங்கதுரை(22) என்ற இளைஞர் மனு கொடுப்பதற்காக வந்திருந்தார். அப்போது அவர், தனியார் வங்கி நிறுவனம் பணமோசடியில் ஈடுபடுவதாகக் கூறி ஆட்சியர் அலுவலக வளாகத்திலேயே விஷமருந்தி தற்கொலைக்கு முயன்றார். அவரை ஆட்சியர் அலுவலக வளாகத்தில் பணியில் இருந்த காவலர்கள் தடுத்து காப்பாற்றி. அவரை உடனடியாக அவசர ஊர்தி 108 மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதையும் படிங்க:வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 24ஆவது ஆண்டாக பதிவைப் புதுப்பித்த நபரை கலாய்த்து புதுக்கோட்டையில் ரகளையான பிளக்ஸ்!