தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

திருமண ஆசை காட்டி இளம்பெண்ணை ஏமாற்றிய இளைஞர் கைது! - youth arrested under Pocso Act

விழுப்புரம்: திருமணம் செய்துகொள்வதாக ஆசை வார்த்தைக் கூறி இளம்பெண்ணிடம் பாலியல் வன்புணர்வில் ஈடுபட்ட இளைஞர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.

இளம் பெண்ணை ஏமாற்றிய இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது  இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது  விழுப்புரத்தில் இளைஞர் போக்சோ சட்டத்தில் கைது  youth arrested under Pocso Act in Villupuram  youth arrested under Pocso Act  Young man arrested for cheating on young woman
youth arrested under Pocso Act in Villupuram

By

Published : Feb 11, 2021, 3:29 PM IST

புதுச்சேரி மாநிலம், முத்திரப்பாளைம் பகுதியைச் சேர்ந்தவர் அல்போன்ஸ் (25). இவர் தனியார் கல்லூரியில் இளங்கலை படிப்பு படித்து வருகிறார். இவரும், 19 வயது இளம்பெண்ணும் கடந்த நான்கு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளனர். அல்போன்ஸ் அடிக்கடி தனது காதலி வீட்டிற்கு சென்று திருமணம் செய்துகொள்வதாக கூறி இளம்பெண்ணுடன் தனிமையில் இருந்துள்ளார்.

இந்நிலையில், அந்த இளம்பெண் தன்னை திருமணம் செய்துகொள்ளுமாறு அல்போன்சிடம் கூறியுள்ளார். அதற்கு, அல்போன்ஸ் தனக்கு வேறு பெண்ணுடன் திருமணம் நிச்சயமாகி உள்ளதாக கூறி அவருடன் பேசுவதை நிறுத்திக்கொண்டார்.

இதையடுத்து, தான் ஏமாற்றப்பட்டதை அறிந்த இளம்பெண் இது குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதனடிப்படையில், காவல் துறையினர் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து அல்போன்சை கைது செய்தனர்.

இதையும் படிங்க:திருமண ஆசை காட்டி பள்ளி மாணவியிடம் வன்கொடுமை: இளைஞர் கைது!

ABOUT THE AUTHOR

...view details