விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலத்தூர் கிராமத்தில் வசித்து வரும் பிச்சைமணி என்பவரின் மகன் சூர்யா(19). இவர் நேற்று அவரது வீட்டில் இருந்து கூட்டுறவு மையத்திற்குச் சென்று பால் ஊற்றி விட்டு அருகிலுள்ள பஞ்சாயத்துக்குட்பட்ட குளத்திற்கு அருகில் அமர்ந்து செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது நிலை தடுமாறி திடீரென்று அவர் குளத்தில் விழுந்தார்.
செல்ஃபோனால் விபரீதம் - பேசிக்கொண்டே சென்று குளத்தில் விழுந்து இளைஞர் உயிரிழப்பு! - செல்போனில் பேசிக் கொண்டிருந்தவர் உயிரிழப்பு
விழுப்புரம்: சூர்யா என்னும் இளைஞர் செல்ஃபோனில் பேசிக் கொண்டிருந்த போது, நிலைதடுமாறி குளத்தில் விழுந்து உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

death
இளைஞர் குளத்தில் விழுந்து உயிரிழப்பு
இது குறித்து அப்பகுதி மக்கள் தீயணைப்புத் துறை, காவல்துறை, ஆம்புலன்ஸ் இடம் தகவல் தெரிவித்துள்ளனர். பின் தகவல் அறிந்து வந்த தீயணைப்புத் துறையினர், குளத்தில் இறங்கி சூர்யாவை மீட்டனர். பின்னர் சிகிச்சைக்காக அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு சூர்யாவை அனுப்பி வைத்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி சூர்யா உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக காவல்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 9-ம் வகுப்பு மாணவன் கல்குவாரி குட்டையில் மூழ்கி உயிரிழப்பு!