தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / state

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞரை அடித்துக் கொன்ற பொதுமக்கள்! - காவல்துறை நடவடிக்கை

விழுப்புரம்: செஞ்சி அருகே இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞரை பொதுமக்கள் அடித்துக் கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

youngman-murder-went-to-urinate-beaten-civilians
youngman-murder-went-to-urinate-beaten-civilians

By

Published : Feb 13, 2020, 3:05 PM IST

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த காரை கிராமத்தை சேர்ந்தவர் சக்திவேல் (26). இவர் விழுப்புரத்தில் உள்ள பெட்ரோல் பங்க் ஒன்றில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் நேற்று (புதன்கிழமை) மதியம் தனது வீட்டிலிருந்து பணிக்கு இருசக்கர வாகனத்தில் சென்ற அவர், செ.புதூர் எல்லைக்குட்பட்ட மலைப்பகுதி அருகே இயற்கை உபாதை கழிக்க ஆடையை கழற்றியுள்ளார்.

அப்போது அங்கு வயலில் வேலை செய்து கொண்டிருந்த பெண் ஒருவர் இதனை தவறாக நினைத்து கூச்சலிட்டுள்ளார். உடனே அந்த பெண்ணின் உறவினர்கள், கிராம மக்கள் அங்கு வந்து சக்திவேலை பலமாக தாக்கியுள்ளனர். இத்தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த பெரியதச்சூர் காவல் உதவி ஆய்வாளர் வினோத், காயமடைந்த சக்திவேலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பாமல், நாளைக்கு விசாரணைக்கு ஆஜராகும்படி எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பியுள்ளார்.

இயற்கை உபாதை கழிக்க சென்ற இளைஞரை அடித்து கொன்ற பொதுமக்கள்

அதனைத்தொடர்ந்து அங்கிருந்து வீட்டுக்குச் சென்ற சக்திவேல், மயங்கி விழுந்து பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனால் சக்திவேலின் உறவினர்கள் அவரை தாக்கியவர்கள் மீதும், துரித நடவடிக்கை எடுக்காத காவல் உதவி ஆய்வாளர் வினோத் மீதும் எவ்வித பாரபட்சமுமின்றி விழுப்புரம் மாவட்ட காவல்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இயற்கை உபாதை கழிக்கச் சென்ற இளைஞரை பொதுமக்கள் அடித்து கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த முதியவர் குண்டர் சட்டத்தில் கைது

ABOUT THE AUTHOR

...view details