விழுப்புரம் மாவட்டம், சின்னசேலம் காந்திநகர் தெருவை சேர்ந்தவர்கள் சீனிவாசன் - கண்மணி தம்பதி. இவர்களின் மகள் அனுஷ்கா(8). சிறுமி அந்த பகுதியில் உள்ள பெட்டிக்கடையில் விற்பனை செய்த குளிர்பானத்தை வாங்கி குடித்துள்ளார். அப்படி குடிக்கும் போது பாட்டிலின் அடியில் பல்லி ஒன்று இறந்து கிடந்ததை பார்த்து கடை உரிமையாளரிடம் தெரிவித்துள்ளார்.
பல்லி விழுந்த குளிர்பானத்தை அருந்திய சிறுமிக்கு தீவிர சிகிச்சை - Young girl drinks cool drinks with which lizzard
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி அருகே பல்லி விழுந்த குளிர்பானம் குடித்த சிறுமிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
பதற்றமடைந்த கடை உரிமையாளர் சிறுமியை உடனடியாக சிகிச்சைக்காக சின்னசேலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றார். அங்கு சிறுமிக்கு முதலுதவி அளிக்கப்பட்டு மேல்சிகிச்சைகாக கள்ளக்குறிச்சி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இதை தொடர்ந்து சிறுமியின் உறவினர்கள் ஆத்தூரில் இயங்கிவரும் குளிர்பான நிறுவனத்தை தொடர்பு கொண்டு தகவல் கொடுத்தனர். இதையறிந்த நிறுவன உரிமையாளர் எவ்வளவு செலவு ஆனாலும் அதை ஏற்றுக்கொள்வதாகவும், தொடர்ந்து சிறுமிக்கு சிகிச்சை அளியுங்கள் என கூறியுள்ளார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.